அடேங்கப்பா.. வேற லெவல்தான்! படக்குழுவினருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்! என்னனு தெரியுமா??
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். அவர் தற்போது சசிகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக பகத் பாசில் மற்றும் சுனில், அனுஷ்யா பரத்வாஜ், தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதன் முதல் பாகம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வனப்பகுதியில் செம்மரம் கடத்துபவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. இதில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். இந்த பாடல் காட்சி ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்த நிலையில் படக்குழுவினருக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்து அல்லு அர்ஜுன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.