இளைஞர்கள் அனைவரும் விமர்சித்துவரும் 96 திரைப்படம்!. காரணம் என்ன தெரியுமா?

இளைஞர்கள் அனைவரும் விமர்சித்துவரும் 96 திரைப்படம்!. காரணம் என்ன தெரியுமா?


all-younsters-are-sharing-96-movie-clips

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பல வரவேற்பை பெற்ற த்ரிஷா, தற்போது மீண்டும் அவருக்கு 96 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் காதலையும், மீண்டும் சந்திக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளையும் அருமையாக காட்டியுள்ளார் இயக்குனர். இந்த படத்தை பார்த்த அனைவரும் பள்ளி பரவ ஞாபகம் வருவதாக கூறிவருகின்றனர்.

அதுவும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் என்றாலே ரசிகர்களுக்கு தற்போது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு காரணம் அவரின் சிறந்த நடிப்புதான்.

பள்ளி பருவத்தை நினைத்தாலே அனைவருக்கும் ஒருவிதமான பீலிங் வரும். இந்த படத்தில் முழுக்க அதை பற்றி காட்டியுள்ளதால் இளைஞர்கள் அனைவரும் சில காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், படத்தை பார்த்த நடிகை குஷ்பு, விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல பிரபலங்கள் போனிலும், டுவிட்டரில் த்ரிஷாவை வாழ்த்தி வருகின்றனர்.