சினிமா

கொரோனோவால் ஏற்பட்ட நஷ்டம்! நடிகர் அக்ஷய் குமார் கொடுத்த பக்கா ஐடியாவால் செம ஹேப்பியில் படக்குழு!

Summary:

Akshay kumar compensates work for corono loss

அக்‌ஷய் குமார் நடிப்பில் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பெல்பாட்டம். இதில் வாணி கபூர், லாரா தத்தா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தை  பூஜா எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் எம்மேய் எண்டெர்டெய்ன்மெண்ட் என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. மேலும் இதன் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஸ்காட்லாந்து சென்ற படக்குழுவினர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு,பின்னரே படப்பிடிப்பை தொடங்கவேண்டும் என அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. 

இந்நிலையில் அதுகுறித்து உணர்ந்த அக்ஷய்குமார் திட்டமிட்ட தினங்களுக்குள் படப்பிடிப்பை முடிக்கும் வகையில் தான் தினமும் இரண்டு ஷிப்ட்களில் நடித்து தருவதாக தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார். இவ்வாறு செய்து தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு கட்டிவிடலாம் என படக்குழுவினருக்கும் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து படக்குழுவினர்கள இரு குழுக்களாக பிரிந்து படப்பிடிப்புகளை விரைவாக நடத்தி வருகின்றனர். மேலும் இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 


Advertisement