ஆமாம்.. இதனால்தான் வருணுக்கு முத்தம் கொடுத்தேன்! போட்டுடைத்த பிக்பாஸ் அக்ஷரா!

ஆமாம்.. இதனால்தான் வருணுக்கு முத்தம் கொடுத்தேன்! போட்டுடைத்த பிக்பாஸ் அக்ஷரா!


Akshara explain about give kiss to varun

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. வருண் நடிகர் ஆவார். அவர் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் குடும்பத்தை சேர்ந்தவர். வருண் தற்போது ஜோஷ்வா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் டிரெய்லர் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

மேலும் அக்ஷரா மாடலிங் துறையை சேர்ந்தவர். பிக்பாஸ் வீட்டில் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்துவந்தனர். இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒன்றாக எலிமினேட் ஆனார்கள். அதன் பின் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் இருவரும் இணைந்து ஒன்றாக படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

Akshara

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கயிறு இழுக்கும் டாஸ்கின்போது நடிகர் வருணின் தோலில் சாய்ந்து தூங்கிய அக்ஷரா எழுந்து செல்லும்போது அவருக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றார். அது வைரலானது. இந்நிலையில் அக்ஷரா தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டில் பல கேமராக்கள் உள்ளது. அதனால் யாரும் கீழ்த்தனமான வேலைகளை செய்துவிட முடியாது. தான் எப்போதும் காலையில் எழுந்தவுடன் தனக்கு பிடித்தவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம்.

அந்த லிஸ்டில் அண்ணாச்சி, சின்னப்பொண்ணு, தாமரை என பலரும் உள்ளனர். அதுபோலத்தான் அன்றும் நான் எழுந்ததும் குட் மார்னிங் சொல்லி வருண் தலையில் முத்தம் கொடுத்தேன். அதுவும் அவர் கட்டியிருந்த ஸ்கார்ப் மீது தான் முத்தம் கொடுத்தேன். அது இந்த அளவிற்கு பேசப்படும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.