சினிமா

போஸ்டர் வரை வந்து அஜித் தவறவிட்டு வெற்றிபெற்ற பிரபல படங்களின் போஸ்டர்கள் இதோ!

Summary:

Ajithkumar missed hits movies list

இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தல அஜித். சாதாரண மெக்கானிக்காக வேலை பார்த்து தனது திறமையாலும், விடா முயற்சியாலும் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார் அஜித். இந்நிலையில் அஜித் நடிப்பதாக இருந்து அதற்காக போஸ்டர்கள் கூட வெளியாகி பாதியில் நின்றுபோன படங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

1 . நேருக்கு நேர்:
அஜித்தை வைத்து ஆசை படத்தை இயக்கிய இயக்குனர் வசந்த் அவர்கள் விஜய் - அஜித்தை இணைத்து நேருக்கு நேர் படத்தை இயக்க முடிவு செய்து சில காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் ஒருசில காரணங்களால் நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலக அவருக்கு பதில் சூர்யா நடித்தார்.

2 . ஜெமினி:
ஜெமினி படத்தில் முதலில் அஜித்துதான் நடிப்பதாக இருந்தது. அதே சமயத்தில் அஜித் ரெட் படத்தில் நடித்துவந்தார். ஜெமினி, ரெட் இரண்டு படமுமே ரவுடிசத்தை மையமாக கொண்ட படம் என்பதால் ரெட் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாததால் அஜித் ஜெமினி படத்தில் இருந்து விலகினார். ஆனால், விக்ரம் நடிப்பில் ஜெமினி படம் மாபெரும் வெற்றிபெற்றது.

3 . நியூ:
அஜித் மற்றும் ஜோதிகாதான் இந்த படத்தில் நடிப்பதாக இருந்து அதற்கான போஸ்டர்கள் வெளியானது. ஆனால், படம் தாமதமாகி ஒருகட்டத்தில் படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் தயாரானது. அந்த சமயத்தில் SJ சூர்யா நாயகனாகவும், சிம்ரன் நாயகியாகவும் ஒப்பந்தமானார்கள். படமும் மாபெரும் வெற்றிபெற்றது.

4 . மிரட்டல் (கஜினி):
அஜித்தை வைத்து தீனா என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் AR முருகதாஸ் அடுத்ததாக அஜித்தை வைத்து மிரட்டல் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால், படகுழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகினார். அதன்பின்னர் சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.


Advertisement