90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
விடாமுயற்சிக்காக அல்டிமேட்டாக மாறிய அஜித்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

லைக்கா பிராடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில், இயக்குனர் மகிழ்திருமேனி இசையில் உருவாகி வரும் திரைப்படம் "விடாமுயற்சி". படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, மகிழ் திருமேனி இயக்குவதாக கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். பல மாதங்களாக படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், ரெஜினா கசாந்த்ரா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அஜித் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே டயட் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் என்று படக்குழுவினர் கூறி வருகின்றனர். அதற்கேற்ப தற்போது வெளியாகும் புகைப்படங்களில் அஜித் மெலிந்து காணப்படுகிறார்.