அட.. வீட்டிலேயே வலிமை படத்தை பார்த்துவிட்டு அஜித் செய்த காரியம்! இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிபோன இயக்குனர்!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு முன்னணி நாயகனான வலம் வரும் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் 60வது படமான இதில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அஜித் பைக் ரேஸிங், ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டியுள்ளாராம். இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு அத்தகைய ரேஸிங் காட்சிகளை படத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அவர் இயக்குனர் வினோத்திடம் கூறி வலிமை படத்தை தனது வீட்டிலேயே பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பார்த்து முடித்தவுடன் வினோத்தை கட்டியணைத்து பாராட்டிய அவர் ஆச்சரிய பரிசும் கொடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி அஜித் அடுத்த படத்தை வேறு இயக்குனருடன் பணிபுரியாற்றிவிட்டு பின்னர் வினோத்துடன் பணிபுரியலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது உடனடியாகவே வினோத் இயக்கத்தில் நடிக்கலாம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.