சினிமா

விஸ்வாசம் படத்தில் தல அஜித் இந்த வேலையையும் செய்துள்ளாரா! வைரலாகும் புகைப்படம்!

Summary:

Ajith operated drone camera for viswaasam

2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிய தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அன்பான கணவர், பாசத்திற்காக ஏசங்கும் தந்தை என தல அஜித் இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

சிவா இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்தார். ஒளிப்பதிவாளராக வெற்றி பணியாற்றினார்.

கிராமத்து பிண்ணனியில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் ட்ரோன் கேமரா மூலம் மேலிருந்து படமாக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இந்த படத்தின் டைடில் வரும் போது மேலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் தான் வரும்.

ட்ரோன் கேமராவின் மூலம் இந்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் தல அஜித் தான் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரோன் கேமராவை அஜித் கையாளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.


Advertisement