திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!



Ajith Kumar With Trisha on Vidaamuyarchi Movie 


மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi).

இப்படம் வரும் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் ரவிச்சந்தரும், ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ், நீரவ் ஷா ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர். எடிட்டிங் பணிகளை என்.பி ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.

ஓடிடி, டிவி வெளியீடு உரிமை

பலகோடி பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் ரூ.100 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. சன் தொலைக்காட்சி நிறுவனம் தொலைக்காட்சி உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் படம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க: Wow... அல்டிமேட் லெவலில், ஸ்டைல் மன்னனாக தல அஜித்.. வைரல் கிளிக் இதோ.! 

இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமார் - நடிகை திரிஷா ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படம், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடெக்சன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 96 படம் குறித்த சூப்பர் செய்தி... ரசிகர்களே தயாரா.?! வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்.?!