சினிமா

என்னவொரு எளிமை! விமான நிலையத்தில் தல அஜித் செய்த காரியம்! யாரும் பார்த்திராத அரிய வீடியோ!

Summary:

தல அஜித் விமானநிலையத்தில் அனைவருக்கும் கைகொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர். மேலும் அவர் எங்கு சென்றாலும் தன்னைப் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை மதித்து அவர்களுக்கு கை கொடுத்து புகைப்படம் எடுப்பார்.  இந்த நிலையில் நடிகர் அஜித் கடந்த சில காலங்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரை கண்டு வணக்கம் கூறிய காவலர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு கை கொடுத்து விட்டு சிரித்துக்கொண்டே சென்றுள்ளார். அந்த வீடியோவை தல ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்


Advertisement