திரையில் அஜித்; நிஜத்தில் அஜித் ரசிகர்கள் - வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி 



ajith fans provide food for kerala people

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

 கேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது.   பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவின் அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பி வழிகின்றன.  கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 33 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன.  

இதுவரை, கேரளாவில் கனமழைக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்துள்ளது. 53,500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்பட முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் பல அரசியல்வாதிகள், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிதிக்கு உதவித்தொகை வழங்கியுள்ளனர்.

Latest tamil news

மேலும்,வெள்ளத்தில் தவிக்கும் கேரள மக்களுக்கு, நிவாரண பொருட்களை அஜித் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். உணவு, தண்ணீர் மற்றும் உடுத்த உடைகளை வழங்கி வருகின்றனர்.