விஸ்வாசம் படம் பார்த்த அஜித் ரசிகர் மரணம்! திரையரங்கில் நடந்த சோக சம்பவம்!Ajith fan died in theater while watching viswaasam movie

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விஸ்வாசம் படத்தை வெளியிட்டுள்ளனர். பட்டமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் வெளியானபோது படம் பார்க்க பணம் தராத தந்தையை மகன் நெருப்பு வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் சர்ச்சைகள் முடியும் முன்பு, விஸ்வாசம் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய கட்டவுட் மீது ரசிகர்கள் ஏற, கட்டவுட் சாய்ந்து ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

viswasam

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்த்து கொண்டிருந்த கோவையை சேர்ந்த ராஜ்குமார் என்ற ரசிகர் இடைவெளி வரை விசில் அடித்து ஜாலியாக தான் இருந்துள்ளார். ஆனால் அதன்பின் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

மது குடித்திருந்த அவர் போதையில் தான் படுத்துள்ளார் என்று அவரது நண்பரும் எழுப்பவில்லை. ஆனால் படம் முடிந்த பின்பு தான் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.