நடிகர் விஜய்க்கு போன் செய்த தல அஜித்! என்ன காரணம்.?
நடிகர் விஜய்க்கு போன் செய்த தல அஜித்! என்ன காரணம்.?

கொரோனா நேரத்தில் கனடாவில் சிக்கியிருக்கும் விஜய்யின் மகன் குறித்து விசாரித்துள்ளார் அஜித்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் மக்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளனர். கொரோனவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கூட ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்திற்கு செல்வது பெரும் சவாலாக உள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் சிக்கிக் கொண்டார். அவர் கனடாவில் இருந்தாலும் பத்திரமாக இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் அவ்வப்போது வீடியோ கால் செய்து மகனுடன் பேசுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் தல அஜித் விஜய்க்கு போன் செய்து சஞ்சய் கனடாவில் பத்திரமாக இருக்கிறாரா, பிரச்சனை எதுவும் இல்லையே என்று விசாரித்துள்ளார் என செய்திகள் வெளியாகி வருகிறது. விஜய்யும் அஜித்தும் நேரம் கிடைக்கும்போது போனில் பேசிக்கொள்வது சஜகமான ஒன்றுதான் என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.