கோபத்தினால் படப்பிடிப்பிற்கு வராமல் வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித்.. படக்குழு அதிர்ச்சி.?

கோபத்தினால் படப்பிடிப்பிற்கு வராமல் வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித்.. படக்குழு அதிர்ச்சி.?


Ajith angry at ennai arindhaal movie shooting

கோலிவுட் திரையுலகில் 'அல்டிமேட் ஸ்டார்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். தமிழில் முன்னணி நடிகரான இவர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார்.

Ajith

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தற்போது அஜித்தின் 68 ஆவது படத்திற்கு 'விடாமுயற்சி' எனும் பெயரிடப்பட்டு படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

இதுபோன்ற நிலையில், 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித் செய்த செயல்களை தற்போது பத்திரிக்கையாளர் அந்தனன் பிரபல யூ ட்யுப் சேனலில் பேசி வருகிறார். அவர் கூறியதாவது, "என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.

Ajith

அப்போது கே எஸ் ஜி வெங்கடேசனை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தேர்வு செய்திருந்தது பட குழு. அஜித்திற்கும், கே எஸ் ஜி கணேசனிற்கும் கருத்து மோதல் இருந்தது. இதனால் அஜித் கேரவனிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதை அறிந்த படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இச்செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.