சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஐஸ்வர்யா ரஜினியின் தற்போதைய நிலை! வெளிவந்த தகவல்!!

Summary:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஐஸ்வர்யா ரஜினியின் தற்போதைய நிலை! வெளிவந்த தகவல்!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம்வந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தற்போது சினிமா துறையையே கலக்கிவரும் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அறிவித்தனர்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதனால் ரஜினி பெரும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவர் ஐதராபாத் சென்று ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தனது மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும், மேலும் காதலர் தினத்திற்குள் அந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement