எல்லாம் கடவுள் வழி! விவாகரத்து அறிவிப்புக்கு பின் காதலர் தினத்தில் ஐஸ்வர்யா செய்த தரமான காரியம்! வீடியோ!!

எல்லாம் கடவுள் வழி! விவாகரத்து அறிவிப்புக்கு பின் காதலர் தினத்தில் ஐஸ்வர்யா செய்த தரமான காரியம்! வீடியோ!!


Aishwarya release music album on Valentines day special

நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அழகிய தம்பதியினராக வலம் வந்த இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனநிலையில் அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர். 

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தனுஷ் தனது பட சூட்டிங்கிலும், ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணியிலும் பிஸியாக இருந்து வந்தனர். ஐஸ்வர்யா காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணியில் இறங்கினார். 

அன்கித் திவாரி இசையமைத்துள்ள முசாபிர் பாடல் பல மொழிகளில் தயாராகிறது. இதனை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் மற்றும் தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இந்த பாடலின் புரோமோ வீடியோவை காதலர் தினமான நேற்று ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் நான் என்ன சொல்வது... கடவுள் வழி காட்டுகிறார் என பதிவிட்டுள்ளார். இந்த மியூசிக் ஆல்பத்தின் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.