லால் சலாம் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படம்.! ஹீரோ இவர்தானா??

லால் சலாம் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படம்.! ஹீரோ இவர்தானா??



aishwarya-rajinikanth-direction-next-movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. தொடர்ந்து ஐஸ்வர்யா 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறவில்லை.

 இந்த நிலையில் ஐஸ்வர்யா நீண்ட காலங்களுக்குப் பிறகு லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அண்மையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

Lal Salaam

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இத்திரைப்படம் வசூலில் பின்னடைவை சந்தித்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் பரவி வருகிறது. திரைப்படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்க உள்ளதாம். மேலும் அந்தப் படத்தில் ஹீரோவாக சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.