சினிமா வீடியோ

சுட சுட முட்டை தோசை! ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் அலப்பறையை பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!

Summary:

aishwarya rajesh make egg dosa video viral

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு பெருமளவில் முன்னேறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் அவர் காக்காமுட்டை படத்தில் இருகுழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக இவர் நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக வானம் கொட்டட்டும் மற்றும் தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ்  தற்போது கா/பெ ரணசிங்கம், துருவநட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  ஐஸ்வர்யாராய் தற்போது மலைப்பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் தனது கையாலேயே சுடசுட முட்டை தோசை போட்டு பணியாளர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் மிகவும் உற்சாகத்துடன் அவர் முட்டை தோசை போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement