"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
எனக்கு அதில் விருப்பமே இல்லை, ஆனால் இயக்குனர்தான்.. ஐஸ்வர்யா ராஜேஷின் குற்றச்சாட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து அவர் பண்ணையாரும் பத்மினியும்,ஆறாது சினம், வட சென்னை, தர்மபுரி என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து சாமி 2 என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் முதல் பாகத்தில் திரிஷா நடித்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். மேலும் இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கினார் .
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதாவது. சாமி 2 படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
ஆனால் விக்ரம் மற்றும் இயக்குனர் ஹரி என்னை தனியாக சந்தித்து எந்த நடிகையும் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை, நீங்கள் நடித்து கொடுங்கள் என கேட்டுக் கொண்டதால் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன் என கூறியுள்ளார்.