கணவரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ராய்!

Aishwarya rai wish her husband on his birthday


Aishwarya rai wish her husband on his birthday

இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 40 வயதை கடந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் தனது கணவர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

aishwarya rai

அபிஷேக் பச்சனின் 43 ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக தன்னுடைய வாழ்த்துக்களை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா. அதாவது அபிஷேக் பச்சனின் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் வலை தளத்தில் பதிவேற்றி,  "ஹாப்பி பர்த்டே மை பேபி" என வாழ்த்தி உள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரத்தில் லைக்குகள் குவிந்தன. மேலும், தனது மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சியால் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளாராம் அபிஷேக் பச்சன்.