அடேங்கப்பா.. சூப்பர்! மீண்டும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை! யார்னு பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. சூப்பர்! மீண்டும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை! யார்னு பார்த்தீங்களா!!


aishwarya-rai-going-to-act-with-rajini-again

தமிழ் சினிமாவில் எக்கசக்கமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.

நடிகர் ரஜினிகாந்த் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர். மேலும் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அண்ணாத்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

aishwarya

இதனை தொடர்ந்து ரஜினியின் 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.