மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
நயன்தாரா பாணியில் களமிறங்கும் அதிதி சங்கர்.. வெளியான தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சங்கர். இவரது மகள் அதிதி சங்கர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிலேயே பிரபலமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அதிதி சங்கரை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை.
இந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.