வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் அருவி பட நடிகை அதிதி! யார் அவர் தெரியுமா?
கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அருவி. இப்படத்தில் மெயின் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அதிதி பாலன். இந்த படம் தான் இவருக்கு முதல் படம்.
அவர் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பிரபலமானார். மேலும் இத்திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை அதிதி அதனை தொடர்ந்து எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மலையாள நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.