சினிமா

விஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை! இதுதான் காரணமா? வெளியான புதிய தகவல்!

Summary:

நடிகை அதிதி ராவ் கால்ஷீட் பிரச்சினையால் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலிருந்து விலகியுள்ளார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனோ அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த அதிதி ராவ் ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் லாக் டவுனில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் துக்ளக் தர்பார் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஆனால் இந்த படத்தில் இருந்து நடிகை அதிதி திடீரென விலகிவிட்டார். அதாவது கால்ஷீட் பிரச்சினையால் அவர் படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக துக்ளக் தர்பார் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் இமைக்கா நொடிகள்,  அடங்கமறு அயோக்யா மற்றும் ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் தற்போது அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார்.


Advertisement