அக்கா கல்யாணத்தில் செம குத்தாட்டம் போட்ட நடிகை அதிதி.! அதுவும் யாருடன் பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!Adidi shankar dance with ranveer in her sister marriage

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இளைய மகளான அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். மேலும் சினிமாவில் ஆர்வம் கொண்ட அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா அவரை பிரிந்து தந்தை வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், ஷங்கரின் துணை இயக்குநரான தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

தொடர்ந்து நேற்று சென்னையில் கோலகலமாக திருமணம் நடைபெற்றது. ரஜினி,கமல், விக்ரம், கார்த்தி, சூர்யா, விக்னேஷ் சிவன், விஷால், அர்ஜுன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களும் அந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் விழாவில் நடிகர் ரன்வீர் சிங், அதிதி ஷங்கர் மற்றும் அவரது சகோதரர் அர்ஜித் ஷங்கர், அட்லீயுடன் "அப்படி போடு போடு" பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.