இளைஞர்களின் கனவுகன்னி, பிரபல முன்னணி நடிகைக்கு கொரோனா உறுதி! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

இளைஞர்களின் கனவுகன்னி, பிரபல முன்னணி நடிகைக்கு கொரோனா உறுதி! செம ஷாக்கில் ரசிகர்கள்!!


Actrss alia bhatt tested corono positive

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓரளவிற்கு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. இத்தகைய கொரோனா தொற்றுக்கு சாமானியர்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஆளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரு நாளைக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக, முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஆலியா பட் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Alia bhatt

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.  வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவருகிறேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.