அடக்கொடுமையே.. திருமணமான ஒரு மாதத்தில் பிரபல நடிகைக்கு இப்படியொரு பெரும் பிரச்சனையா! செம ஷாக்கான ரசிகர்கள்!

அடக்கொடுமையே.. திருமணமான ஒரு மாதத்தில் பிரபல நடிகைக்கு இப்படியொரு பெரும் பிரச்சனையா! செம ஷாக்கான ரசிகர்கள்!


actress-yami-gawtham-summended-by-enforcement-directora

தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வெளிவந்த கவுரவம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாமி கவுதம். அதனைத் தொடர்ந்து அவர் ஜெய் நடிப்பில் வெளிவந்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். யாமி கவுதம் கன்னடம், இந்தி, பஞ்சாபி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்த ஜூன் மாதம்தான் இயக்குனர் ஆதித்யா தர்ரை திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது யாமி கவுதம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்திற்கு எதிராக மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது நடிகை யாமியின் வங்கிக் கணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி 1.5 கோடி ரூபாய்  பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. 

Yami gawtham

 மேலும் இதுகுறித்து அடுத்த வாரத்திற்குள் நேரடியாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. திருமணமாகி ஒரு மாதங்களே ஆனநிலையில் இப்படி ஒரு பிரச்சினையா என யாமியின் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.