சினிமா

நிச்சயதார்த்தம் வரை சென்ற காதல் என்னாச்சு! திருமணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்த நடிகர் விஷால்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் அனிஷாவும் தனது இணையதள பக்கத்திலிருந்து விஷாலுடன் எடுத்த புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். அதனை தொடர்ந்து அனிஷாவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல்கள் பரவியது.

After Kangana-support tweet, Vishal on BJP radar - DTNext.in

 இந்த நிலையில் தனது திருமணம் குறித்து முதன்முதலாக பேசிய நடிகர் விஷால், என் திருமண விஷயத்தில் சில விஷயங்கள் என் கையை மீறி சென்றுவிட்டது. நான் தற்போது சிங்கிள்தான் மிங்கிளாக ரெடி. திருமணம் எப்போது நடக்குமோ அப்பொழுது நடக்கட்டும். வாழ்க்கை போகும் போக்கில் போகிறது என்று கூறியுள்ளார்.
 


Advertisement