விபத்தில் சிக்கிய கணவரால் வாடும் நடிகை; உதவாத நடிகர் சங்கத்தால் சோகத்தில் பிரபல தமிழ் நடிகை.!

தமிழ் திரையுலகில் மணல் கயிறு திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை வினோதினி. இவர் தமிழ்மொழி மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் உட்பட பழமொழிகளிலும் நடித்திருக்கிறார்.
பிரசாந்துடன் வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் இவர் ஜோடியாகவும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்திவிட்ட வினோதினி, தனது கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது கணவர் விபத்தில் சிக்கியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கணவரின் மீது மோதிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் ரூ.10,000 அபராதம் செலுத்தி விட்டு சென்றுவிட்ட நிலையில், தனியொரு ஆளாக குடும்பத்தை நடிகை கவனித்து வருகிறார்.
நடிகர் சங்கத்தின் உதவி கிடைத்திருந்தால் தனது கணவரின் மீது விபத்து ஏற்படுத்திய நபர்களுக்கு தக்க தண்டனை வழங்கியிருக்கலாம் என்று மன வேதனைப்படும் நடிகை, தான் தனி ஒரு பெண்மணியாக கணவரை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல தனது குடும்பத்திற்காக தான் மட்டுமே இருக்கும் நிலையில், எப்படியாவது கணவரை காப்பாற்றி குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.