சினிமா

அடி ஆத்தி... என்ன ஒரு தைரியம்... நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் அசந்துபோன ரசிகர்கள்! வைரல் வீடியோ இதோ...

Summary:

அடி ஆத்தி... என்ன ஒரு தைரியம்... நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் அசந்துபோன ரசிகர்கள்! வைரல் வீடியோ இதோ...

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக மட்டுமின்றி வில்லியாகவும் களமிறங்கி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கி யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி எக்கச்சக்க கமெண்ட்களை  பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ....


Advertisement