சினிமா

பயப்படாதீங்க.. இது ஹெல்மெட் மாதிரி! டபுள் ஆக்ஷனில் நடிகை வரலட்சுமி வெளியிட்ட மாஸ் வீடியோ!!

Summary:

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி வருகிறது. இந்த நிலையில்

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே நிரந்தர தீர்வு என வலியுறுத்தி அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தை போக்கும் வகையில், பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தடுப்பூசி குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது எவ்வளவு முக்கியம் எனவும். அதற்கு பயப்படத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். தடுப்பூசி என்பது ஹெல்மெட் போன்றது. விபத்தின்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்துகொள்ளலாம். அதேபோல தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 


Advertisement