சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய சீரியல் நடிகை வாணி போஜன்! புகைப்படம் உள்ளே!

Summary:

Actress vani bojan new golden look photos goes viral

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று சன் தொலைக்காட்சி. இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி, தற்போது அனைத்து தரப்பு மக்களையும் சீரியல் பார்க்க வைத்துவிட்டது சன் தொலைக்காட்சி. சன் டீவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் ஒன்றுதான் தெய்வமகள். இளைஞர்களையும் டிவி தொடர் பார்க்க வைத்த பெருமை இந்த தொடரின் நாயகி சத்யாவுக்கு உண்டு. தெய்வம்கள் தொடருக்கு முன்னர் ஒருசில டிவி தொடர்களில் பங்கேற்றுள்ள நடிகை வாணி போஜன், தெய்வமகள் தொடர்வழியாக சத்யாவாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள வாணி போஜனுக்கு நடிகர் நிதின் சத்யா மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் வைபவுக்கு ஜோடியாக, நிதின் சத்யா தயாரிக்க இருக்கும் புது படம் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளார் வாணி போஜன்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகிவருகிறது. அதில் பார்ப்பதற்கு மிகவும் மாடர்னாக, ஹீரோயின் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன். 


Advertisement