வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல... த்ரிஷாவின் வீடியோவை பார்த்து புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்!!

வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல... த்ரிஷாவின் வீடியோவை பார்த்து புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்!!



Actress Trisha latest promo video viral

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை த்ரிஷா. அதனைத் தொடர்ந்து அஜித், விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

த்ரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராங்கி படத்தின் ப்ரோமஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றது. ப்ரோமஷனுக்காக புதிய வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. அதனை பார்த்த ரசிகர்கள் மெழுகு டாலு நீ, வயசானாலும் அழகு குறையவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.