ஊடகத்தினரை மிருகத்தனமாக தாக்கினார்களா தமன்னாவின் பாதுகாவலர்கள்?.. போட்டோ எடுக்க கேட்டது தப்பா?.! Actress thamanna bodyguards attacked media people

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவரை ரசிகர்கள் அனைவரும் "மில்கி பியூட்டி" என்று தான் அழைப்பார்கள். இந்த நிலையில், பப்ளி பவுன்சர் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ள தமன்னா, படத்தின் விளம்பரத்திற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது புகைப்படம் எடுக்க ஊடகத்தினர் அவரை அனுமதி கேட்டபோது, தமன்னாவின் பாதுகாவலர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதமானது சிறிது நேரத்திலேயே முற்றியுள்ளது.

Actress thamanna

இதனால் பாதுகாவலர்கள் கோபமுற்று ஊடகத்தினரை தாக்கியதாக கூறப்படும் வீடியோ மக்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இதனை கண்ட ரசிகர்கள் ஏன் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.