இதெல்லாம் தேவையா அம்முனி?.. தோழிபோல பழகி ரசிகையின் வீட்டில் நகைகள் திருடிய கேடி நடிகை.!Actress Soumya Shetty Stolen Jewels 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், பாலாஜி ரெசிடென்சி பகுதியில் குடியிருக்கும் நபரின் வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகள் மாயமானது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், நடிகை சௌமியா ஷெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார். 

இவர் பிரசாத் என்பவரின் மகளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நட்பாக பழகி, அவரின் பின்புலத்தை அறிந்துகொண்டு பிப்ரவரி 2ம் தேதி வீட்டிற்கு வந்து சென்றபோது நகைகளை திருடி இருக்கிறார். 

வீட்டில் இருந்த நகைகளை எதற்ச்சையாக சோதித்தபோது அவை மாயமானது தெரியவரவே, புகார் அளித்து நடந்த விசாரணையில் நடிகையின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. தற்போது நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.