சினிமா

20 வயதில் தனது இளமையால் சினிமா ரசிகர்களை கிரங்கடித்த நடிகை சிவரஞ்சனி தனது 50 வயதில் எப்படி உள்ளார் தெரியுமா.? வைரல் புகைப்படம் உள்ளே.!

Summary:

Actress sivaranjani latest photos

பொதுவாக சினிமா என்றாலே ஹீரோயின்களின் மவுசு அவர்களுக்கு வயசு இருக்கும்வரை மட்டும்தான். சற்று வயது அதிகமாகிவிட்டாலே பட வாய்ப்புகள் குறைய தொடங்குவதும், ஹீரோ, ஹீரோயினுக்கு அம்மா, அக்காவா நடிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிவரஞ்சனி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சிவரஞ்சனி. சரத்குமாருக்கு ஜோடியாக இவர் நடித்த அரண்மனை காவலன் என்ற திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாக்கியது.

அதன் பிறகு வேறு மொழி படங்களில் பிஸியான இவர் கடைசியாக 1998 ஆம் ஆண்டு துர்கை அம்மன் என்ற தமிழ் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதேநேரம்  ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் சிவரஞ்சனி.

திருமணத்திற்கு பிறகு இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது எங்கு உள்ளார், என்ன ஆனார் என எந்த தகவல்களும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

20 வயதில் தென்னிந்திய சினிமாவை தனது இளமையால் கிரங்கடித்த இவரின் தற்போதைய படம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement