வாவ்.. நடிகை ஸ்ரேயாவா இது! சிறுவயதில் கொழுகொழுவென எப்படி இருக்கார் பார்த்தீர்களா!!

வாவ்.. நடிகை ஸ்ரேயாவா இது! சிறுவயதில் கொழுகொழுவென எப்படி இருக்கார் பார்த்தீர்களா!!


actress shreya childhood photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கி வருபவர் ஸ்ரேயா சரண். இவர் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாதுறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் அவர் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் ரஷ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

shreya

பின்னர் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரேயா அப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரணின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் ஸ்ரேயாவா இது! குட்டிப் பாப்பாவாக செம க்யூட்டாக இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

shreya