ரசிகர்களுக்கு ஷாக்.. "விரைவாக குணமடைய பிரார்த்தியுங்கள்".. படப்பிடிப்பில் காலை உடைத்துக்கொண்ட பிரபல நடிகை..! 

ரசிகர்களுக்கு ஷாக்.. "விரைவாக குணமடைய பிரார்த்தியுங்கள்".. படப்பிடிப்பில் காலை உடைத்துக்கொண்ட பிரபல நடிகை..! 


actress-shilpa-shetty-leg-fracture-shooting-spot-accide

நடிகை ஷில்பா ஷெட்டி வெப்சீரிஸ், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் நடித்து வருகிறார். இவர் புதிதாக "இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்" என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் நிலையில், இதனை  இயக்குனர் ரோஹித் ஷெட்டி தன்னுடைய "காப் யூனிவர்சின்" ஒரு அங்கமாக இயக்கி வருகிறார்.

இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பின் போது நடிகை ஷில்பாஷெட்டி தனது காலை உடைத்துக்கொண்டார். அவர் காலில் கட்டுபோட்டு வீல்சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில், இது தொடர்பாக ஷில்பாஷெட்டி தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

Actress Shilpa Shetty

அவர் கூறியதாவது, "உண்மையிலேயே நான் எனது காலை உடைத்துக் கொண்டேன். இன்னும் ஆறு வாரங்களுக்கு படப்பிடிப்புகளில் என்னால் பங்கேற்க முடியாது. விரைவாக குணமடைய பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் "இன்னும் வலுவான, சிறப்பான முறையில் திரும்பி வருவேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடிகை ஷில்பா ஷெட்டி இதே வெப்சீரிஸ்காக சண்டை காட்சி ஒன்றில் நடிப்பது போன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், சண்டைக்காட்சிகளில் ரீல் போடாமல் நடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அத்துடன் "இந்தியன் போலீஸ் போர்ஸ் வெப் சீரிஸில், சித்தார்த் மல்கோத்ரா விவேக் ஒபேராய், ஈஷா தல்வார் போன்றோரும் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. ஷில்பா ஷெட்டியின் நிலைமையை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.