அந்த பாட்டு உங்களையும் விட்டு வைக்கலையா.!! காட்டுக்குள் என்ஜாய் எஞ்சாமி பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. வீடியோ...

அந்த பாட்டு உங்களையும் விட்டு வைக்கலையா.!! காட்டுக்குள் என்ஜாய் எஞ்சாமி பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. வீடியோ...


actress-shalushamu-latest-video

நடிகை ஷாலு சம்முவின் என்ஜாய் என்ஜாமி பாடல் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

வருத்தப்படாதா வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்தில் ஹீரோயினி ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாகவும், நடிகர் சூரிக்கு ஜோடியாகவும்  நடித்து அசத்தி இருந்தார்.

கருப்பழகியாக, ஒரு கிராமத்து பெண் போலநடித்திருந்த இவரது கதாபாத்திரமும், இவரது நடிப்பும் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.. அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

Enjoy Enjami

மேலும் சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு பசங்க கூட காட்டுக்குள் போட்ட ரகளை வீடியோ ஒன்றை வெளியிட, அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.