சினிமா

இந்த பாட்டுக்கு இப்படியும் டான்ஸ் ஆடலாமா! சாயிஷாவின் ஆட்டத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

Summary:

Actress Shaiesha hot dance for Hindi song video goes viral

ஹிந்தி பாடல் ஒன்றிற்கு நடிகை சாயிஷா நடனமாடியுள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறினார்.

வனமகன் படத்தை அடுத்து நடிகர் ஆர்யா உடன் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபோது ஆர்யா சாயிஷா இருவரும் காதலித்தனர். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சாயிஷா தற்போது ஆர்யாவுடன் டெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது மாட்டுக்கும் இல்லாமல் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீட்டிற்குள்ளேயே நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார் நடிகை சாயிஷா.

இந்நிலையில் தனது நடனமாடுவது திறமையை பறைசாற்றும் வகையில் இந்தி பாடல் ஒன்றிற்கு நடிகை சாயிஷா நடனம் ஆடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement