சினிமா லைப் ஸ்டைல்

மகனின் உயிரை காப்பாற்ற புதிய முயற்சியில் இறங்கிய பிரபல நடிகை! பரபரப்பு வீடியோ

Summary:

actress sethulakshmi asks help for her son

சிறுநீரக கோளாறு காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் மகனின் சிகிச்சைக்கு பண உதவி வேண்டி மலையாள முன்னணி நடிகை சேதுலட்சுமி கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான "கவ் ஓல்ட் ஆர் யூ" என்ற படத்தின் மூலம் சிறந்த நடிகையாக வெளிஉலகிற்கு தெரிய ஆரம்பித்தார் நடிகை சேதுலட்சுமி. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சேதுலட்சுமி கேரள சினிமா துறையால் வழங்கப்படும் சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார். மேலும் தமிழில் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார்.

sethulakshmi in 36 vayathinile க்கான பட முடிவு

நடிகை சேதுலட்சுமியின் மகன் கிஷோர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். சேது லட்சுமி அவருக்காக தனது சிறுநீரகத்தை அளிக்க முன்வந்த போதும் தாயாரின் உடல்நிலை கருதி மகன் மறுத்துள்ளார். தற்போது கிஷோர் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கேரளாவில் உள்ள பிஆர்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேதுலட்சுமி இதுவரை தான் சினிமாவில் சம்பாதித்த பணம் முழுவதையும் மகனின் சிகிச்சைக்காக செலவு செய்து விட்டார்.

இரண்டு நாளுக்கு ஒருமுறை கிஷோருக்கு டயாலிஸிஸ் (இரத்த சுத்திகரிப்பு) செய்ய வேண்டும். இதோடு ரூ.6500 மதிப்புள்ள ஊசியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டியது அவசியம். டயாலிஸிஸுக்கு 1200-ம், ரத்தத்துக்கு ரூ 900-ம் செலவாகிறது. இதோடு மருந்து, மாத்திரைகள் செலவும் உள்ளது. மேலும், கிஷோரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கவனிக்கவும் பணம் வேண்டும். 

நான் மலையாள திரையுலக சங்க உறுப்பினர் தான். அவர்களிடம் இது பற்றி கூறிவிட்டேன். எல்லோரும் என் மகனுக்கு உதவி செய்து அவன் உயிரை காப்பாற்ற வேண்டும். கிஷோரின் சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டதால் அதற்கு பெருமளவு உதவி செய்து என் மகள் வெகுநாட்கள் வாழ உதவ வேண்டும் என கண்ணீருடன் உதவி கோரியுள்ளார்.


Advertisement