மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
இதுவரை தளபதி விஜய்க்கு மட்டும் அம்மாவாக ஒரு படத்தில் கூட நடிக்காத ஒரே நடிகை... யார் அவர் தெரியுமா.?
தளபதி விஜய் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பூ ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா என திரையுலக பட்டாளமே இப்படத்தில் ஒன்றாக நடிக்கிறது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜெயசுதா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதிய தகவலாக அம்மா கதாபாத்திரத்தில் பெயர்போன நடிகை சரண்யா பொன்வண்ணன் மட்டும் இத்தனை ஆண்டுகளில் இதுவரை விஜய்க்கு மட்டும் அம்மாவாக ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி, ராகவா லாரன்ஸ், ஜீவா, சேரன் என பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த நடிகை சரண்யா பொன்வண்ணன் விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை.