சமீரா ரெட்டியா இது ! 11கிலோ வரை உடல்எடையை குறைத்து தற்போது எப்படி உள்ளார் பாருங்க..! வைரலாகும் புகைப்படம் இதோ....

சமீரா ரெட்டியா இது ! 11கிலோ வரை உடல்எடையை குறைத்து தற்போது எப்படி உள்ளார் பாருங்க..! வைரலாகும் புகைப்படம் இதோ....



actress-sameera-reddy-weight-loss-photo

கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.

பின்னர் 2014ம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை  நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். 

சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயான சமீரா ரெட்டியின் உடல் எடை  தாறுமாறாக ஏறிய  நிலையில்,  கடந்த வருடம் 92 கிலோ எடையில் இருந்துள்ள அவர் , தற்போது தீவிர  உடற்பயிற்சி மற்றும் சில விஷயங்களை கடைபிடித்து தற்போது 11 கிலோ எடையை  குறைத்து தற்போது 82 கிலோ எடையில் உள்ளாராம். தற்போது அந்த புகைப்படத்தை தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துத்துள்ளார். இதை  கண்ட  ரசிகர்கள் ஒரு வருடத்தில் 11 கிலோ  எடையை எப்படி குறைதீங்க... டிப்ஸ் கொடுங்க என  கேட்டு வருகின்றனர்.