சினிமா

நடிகை சமீராவா இது! முடியெல்லாம் நரைத்து, வயதான தோற்றத்தில் எப்படி ஆகிட்டாரு பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ்  சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்தத

தமிழ்  சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சமீரா ரெட்டி. அதனைத் தொடர்ந்து அவர் வேட்டை, வெடி, அசல், நடுநிசி நாய்கள் என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சமீரா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சமீரா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சமீரா, துளி கூட மேக்கப் இல்லாமல் நரைத்த வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  மேலும் அதில்,  நான் ஏன் எனது வெள்ளை முடியை மறைக்கவில்லை என்று என் அப்பா கேட்டார். அதற்கு  நான் முன்பு போல் இதைப் பற்றி சிந்திப்பதில்லை என்றும் சுதந்திரம் என்னை அந்த எண்ணத்திலிருந்து விடுவிக்கிறது என்றும் கூறியதாக பதிவிட்டுள்ளார். 

    


Advertisement