சினிமா

இன்றோடு 11 வருஷமாச்சு! ரொம்ப நன்றி! நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா!! ஏன் தெரியுமா?

Summary:

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் கதாநாயகியாக அறிமு

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா, தனுஷ், ஜீவா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.

மேலும் அவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை சமந்தா முதன்முதலாக சினிமாவில் அறிமுகமாகி வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்பு, திரிஷா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

 இந்த நிலையில் சினிமாவிற்குள் நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் கௌதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நன்றி கௌதம்மேனன் சார். என்னுள் ஏதோ இருக்கிறது என பார்த்ததற்கு நன்றி. உலகில் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை உருவாக்கி இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி என குறிப்பிட்டு நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 


Advertisement