எனக்கு தெரியாமலே நான் எப்படி கர்ப்பமானேன்! சமந்தா தடாலடி!



actress samantha

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகிறது.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது.

pragent

நடிகை சமந்தா கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது.

நடிகை சமந்தா தனது ட்விட்டரில், ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

‘ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் சமந்தா இப்படி செய்திருக்கிறார்.இயக்குநர் பி.வி நந்தினி ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஜூலை 5-ம் தேதி வெளியாகிறது.

pragent

தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வரும் சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இது குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சமந்தா நான் கர்ப்பமாக இருக்கனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள் என காமெடியாக பதில் கொடுத்துள்ளார்.