கிறிஸ்மஸ் தாத்தாவாக மாறி சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ரோஜா.!

கிறிஸ்மஸ் தாத்தாவாக மாறி சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ரோஜா.!


Actress Roja surprise to physical Challenger

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. அதன் பின்னர் இவர் ரஜினி, சரத்குமார், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இதனிடையே இயக்குனர் செல்வமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் களமிறங்கியுள்ளார்.

Roja

அதன்படி ஜெகன்மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு நகரி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அதன்படி விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி என நாகராஜ் வீட்டிற்கு கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் சென்ற நடிகை ரோஜா அவருடைய மகள்கள் படிப்பிற்காக 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.