என்ன இப்படி சொல்லிட்டாங்களே.. நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலிருந்து நடிகை ரச்சிதா விலக இதுதான் காரணமா? ஷாக்கான ரசிகர்கள்!!Actress ratchitha post about releaving from vijay tv serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இந்தத் தொடரில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் மாயன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக மகா என்ற ரோலில் நடிகை ரச்சிதா நடித்து வந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது அவர் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தநிலையில் திடீரென அதிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Ratchitha

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இனி நான் இல்லை என்பது பலருக்கும் ஏமாற்றமாக இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது சூழ்நிலையும் புரிந்துகொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கண்டிப்பாக எனக்கு வருத்தம்தான். உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள்.

ஆனால் பல நேரங்களில் தொடரில் நான் மதிப்பற்றவளாக  உணர்ந்தேன். மேலும் நான் இருக்கிறேனோ, இல்லையா என்ற எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்தததால் தான் இந்த முடிவெடுத்தேன். நமக்கிருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம். என்றும்போல நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.