குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகை ரட்சிதாவை பார்த்தீங்களா! செம்ம மாடர்னாக வேற லெவலில் இருக்காரே!!

குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகை ரட்சிதாவை பார்த்தீங்களா! செம்ம மாடர்னாக வேற லெவலில் இருக்காரே!!



Actress ratchitha modern photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இதில் பல சீசன்களிலும் மீனாட்சியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ரட்சிதா. இவர் இதற்கு முன்பு பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் ரட்சிதா தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோயினாக, மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் அத்தொடரில் இருந்து விலக இருப்பதாகவும்,  வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரட்சிதா அண்மைக்காலமாக ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை வைத்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது செம கெத்தாக மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் தாவணி பாவாடையிலும், புடவையிலும் கலக்கி வந்த ரட்சிதாவா இது! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.