இனி சாமி சாமி பாடலுக்கு நடனமாட மாட்டேன்... ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பான ராஷ்மிகா.!?
முண்ணனி நடிகையான ராஷ்மிகா மந்தாண்ணா கன்னட திரைப்படமான 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் காலடியெடுத்து வைத்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின தமிழ், தெலுங்கு, கன்னடம் என ரவுண்டு கட்டிக்கொண்டு திரைப்படங்களில் நடித்தார்.
2016ஆம் வருடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்திற்கு பின் கன்னடத்தில் அஞ்சனி புத்ரா, சமக் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும், ஜி கன்னட தொலைக்காட்சி விருதையும் பெற்றார். தெலுங்கில் சலோ, கீதா கோவிந்தம், டியர் காம்பிரேட், எஜமானா, புஷ்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் முண்ணனி நடிகர்களான கார்த்தி நடித்த சுல்தான் மற்றும் விஜய் நடித்த வாரிசு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
2021ஆம் வருடம் தெலுங்கில் 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் வெளியாகி செம்ம ஹிட்டாக ஓடி வெற்றி பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தாண்ணா பகத் பாசில் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரமலமானது. அதில் 'சாமி சாமி' பாடல் சூப்பர் ஹிட்டாகியது.
இதுபோன்ற நிலையில், புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஷ்மிகா மந்தாண்ணா எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சாமி சாமி பாடலுக்கு நடனமாட சொல்கின்றனராம். சமீபத்தில் ரசிகர் ஒருவர் கூட ராஷ்மிகாவை சந்திக்கும் போது இந்த பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று கூறினாராம். இதனால் கடுப்பான ராஷ்மிகா இனி இந்த பாடலுக்கு நடனமாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.